நாளையும், மறுநாளும் இந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!
தமிழகத்தில் வங்கக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வந்தது. தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுவிட்டது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் இது வடக்கு திசையில் மெதுவாக நகர்ந்து வலிமை பெற வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் பருவமழை தீவிரமாவது உறுதியாகியுள்ளது. இந்நிலையில் நாளை மே29 மற்றும் நாளை மறுநாள் மே 30ம் தேதி நீலகிரி, கோவை மாவட்ட மலைப்பகுதிகளுக்கு மிக கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் கடந்த 5 நாட்களாக அடை மழை பொழிந்து வருகிறது. மழைவிடும் நேரங்களில் சூறைக்காற்று வீசக்கூடும் .
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!