ரெட் அலர்ட்: நாளை சென்னை உட்பட 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
'டிட்வா' புயல் காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் நேற்று இரவு தொடங்கிய கனமழை இன்று மாலை வரையிலும் தொடர்ந்து பெய்து வரும் நிலையில், அடுத்த 24 மணி நேரத்திற்குச் சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்கு 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், நாளை (டிசம்பர் 2) ஒருநாள் சென்னை உட்பட 4 மாவட்டங்களில் உள்ள அனைத்துப் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாளை டிசம்பர் 2ம் தேதி மழையின் தாக்கம் நீடிக்கும் என்பதால், பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள்:
சென்னை (ரெட் அலர்ட்), திருவள்ளூர் (ரெட் அலர்ட்), காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களிலும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (டிசம்பர் 2) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இன்று (டிசம்பர் 1) காலை கனமழை பெய்த போதிலும், பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படாததால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையைத் தவிர்க்கும் விதமாக, நாளை மழையின் தாக்கம் நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால், முன்கூட்டியே விடுமுறை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!