உஷார்... பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறிய ஃபிரிட்ஜ் கம்ப்ரஸர்... ஒருவர் பலி!
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மின் சாதனப் பொருட்கள் பழுது நீக்கும் ஒரு கடையில் ஏற்பட்ட திடீர் கம்ப்ரசர் வெடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றார். வெடித்த கம்ப்ரசர், பழுது நீக்கும் பணியின் போது அதிக வெப்பத்தால் வெடித்ததாக சந்தேகம் எழுந்துள்ளது.
மயிலாடுதுறை கூறைநாடு திருமஞ்சன வீதியில் வசித்து வருபவர் பாலாஜி . 53 வயதான இவர் நகரில் உள்ள காமராஜர் பேருந்து நிலையம் அருகே ஏ.சி., பிரிட்ஜ் உட்பட பல மின் சாதனங்கள் பழுது பார்ப்பதற்கான கடை நடத்தி வந்தார். அவருடன் 26 வயது கணேஷ் என்ற தொழிலாளியும் பணிபுரிந்து வந்தார். நேற்று பிற்பகல் ஒரு பழுதடைந்த பிரிட்ஜில் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அதனுடன் இணைக்கப்பட்டிருந்த கம்ப்ரசர் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.
வெடிப்பில் கடை உரிமையாளர் பாலாஜி தலையில் கடுமையாக காயம் அடைந்தார். அருகில் இருந்த கணேஷுக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இதனைக் கண்ட உடனடியாக இருவரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது, பாலாஜி ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர். கணேஷ் தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குறைந்த பாதுகாப்புடன் மின் சாதனங்களை பழுது பார்ப்பது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதற்கான முக்கிய எடுத்துக்காட்டாக அமைந்துவிட்டது. பொதுமக்கள் மற்றும் தொழிலாளர்கள் இதுபோன்ற பணிகளில் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டியதைக் குறிக்கும் சம்பவமாக காணப்படுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!