undefined

அகதிகள் சென்ற படகு கவிழ்ந்த சோகம்… பச்சிளம் குழந்தைகள் உட்பட 53 பேர் பலி

 
 

லிபியாவில் இருந்து ஐரோப்பாவுக்கு சட்டவிரோதமாக சென்ற படகு கவிழ்ந்த விபத்தில் 53 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 4 பச்சிளம் குழந்தைகளும் உள்ளனர். நைஜீரியா, காம்பியா, செனகல் உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட அகதிகள் சிறிய ரப்பர் படகில் இத்தாலியை நோக்கி புறப்பட்டிருந்தனர்.

படகு புறப்பட்ட சில மணி நேரங்களிலேயே இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால் நடுக்கடலில் தத்தளித்துள்ளது. அப்போது ஏற்பட்ட ராட்சத அலைகள் படகை மோதி கவிழ்த்தன. இதில் பலர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர். தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் விரைந்து சென்று கடலில் தத்தளித்த 40 பேரை உயிருடன் மீட்டனர்.

ஆப்பிரிக்க நாடுகளில் நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் உள்நாட்டுப் போர்கள் காரணமாக மக்கள் ஆபத்தான கடல் பயணங்களை மேற்கொள்கிறார்கள் என கூறப்படுகிறது. பாதுகாப்பு வசதி இல்லாத சிறிய படகுகளில் அதிக நபர்கள் பயணிப்பதால் இத்தகைய விபத்துகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!