undefined

திருமணம் செய்துவைக்க மறுப்பு... தாய்மாமன் மகளை குத்திக்கொன்ற வாலிபர்!

 

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில், தான் மதுப்பழக்கத்திற்கு அடிமையானதால் திருமணம் செய்து வைக்க மறுத்த தாய்மாமன் மீது ஆத்திரம் கொண்ட வாலிபர் ஒருவர், அவரது மகளைச் சட்டெனக் கத்தியால் குத்திக்கொன்ற அதிர்ச்சிச் சம்பவம் நடந்துள்ளது. இந்தச் சம்பவத்தை அடுத்து, தப்பியோடிய அந்த வாலிபரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

ஸ்ரீகாகுளம் மாவட்டம் டெக்கலி பகுதியைச் சேர்ந்தவர் காந்தாராவ். இவரது மகள் பவித்ரா (19). காந்தாராவின் அக்காள் மகன் உமாசங்கர் (25). உமாசங்கர் மற்றும் பவித்ராவுக்குத் திருமணம் செய்துவைக்க இரு குடும்பத்தாரும் முதலில் முடிவு செய்திருந்தனர். ஆனால் உமாசங்கர் மதுப்பழக்கத்திற்கு அடிமையானதால், காந்தாராவ் திருமணத்திற்கு மறுப்புத் தெரிவித்து, தனது மகளுக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து வந்துள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த உமாசங்கர், நேற்று முன்தினம் (டிசம்பர் 8) ஐதராபாத்தில் உள்ள காந்தாராவ் வீட்டிற்குச் சென்று தகராறில் ஈடுபட்டுள்ளார். ஒருகட்டத்தில் ஆத்திரம் தாங்காமல், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்துப் பவித்ராவின் கழுத்தில் பலமாக குத்தியுள்ளார்.

உடனே உமாசங்கர் அங்கிருந்து தப்பியோடி விட, ரத்த வெள்ளத்தில் துடித்துக்கொண்டிருந்த பவித்ராவை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் முன்பே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தப்பியோடிய உமாசங்கரை வலைவீசித் தேடி வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!