undefined

ரூ.40000 கோடி மோசடி… ரிலையன்ஸ் முன்னாள் தலைவர் கைது! 

 

ரூ.40 ஆயிரம் கோடி மதிப்புள்ள வங்கி கடன் மோசடி வழக்கில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் புனித் கார்க்கை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. அனில் அம்பானி தலைமையிலான ஆர்.காம் மற்றும் அதன் குழும நிறுவனங்கள் வங்கி மோசடி, பணமோசடி செய்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்த வழக்கில் இதுவரை சுமார் ரூ.11 ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. விசாரணையின் ஒரு பகுதியாக ஆர்.காம்-இன் முன்னாள் தலைவரும் இயக்குநருமான புனித் கார்க் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை டெல்லி சிறப்பு பிஎம்எல்ஏ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இதனைத் தொடர்ந்து புனித் கார்க் 9 நாட்கள் அமலாக்கத்துறை காவலில் அனுப்பப்பட்டுள்ளார். மேலும் அவரது மனைவி பெயரில் உள்ள பங்குகள் மற்றும் பரஸ்பர நிதிகளும் முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!