undefined

மதம் மாறி திருமணம்... புது மாப்பிள்ளையின் குடும்பத்தை அரிவாளால் வெட்டி சாய்த்து மணப்பெண்ணை அழைத்து சென்ற  கொடூரம்! 

 
 

கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்தவர் டேனியல் (49). இவரது மனைவி கலையரசி (38). இவர்களது மகன் ராகுல் (22) ஒரு பெண்ணைக் காதலித்தார். ராகுல் தன் நண்பர் பிரகாஷ் (34) உடன் காதலித்த பெண்ணையும் சேர்த்துக்கொண்டு வேளாங்கண்ணிக்கு வந்தார். அங்குள்ள பேராலயத்தில் வைத்து ராகுலுக்கும் அவரது காதலிக்கும் நேற்று முன்தினம் திருமணம் நடந்தது. குடும்பத்தினர் முன்னிலையில் இந்தத் திருமணம் நடைபெற்றது.

திருமணம் முடிந்ததும் அனைவரும் ஒரு விடுதியில் தங்கியிருந்தனர். இதற்கிடையே, ராகுல் காதலித்த பெண்ணின் உறவினர்களுக்குத் தகவல் கிடைத்தது. இதனால் ஆத்திரமடைந்த பெண்ணின் உறவினர்கள் நேற்று வேளாங்கண்ணிக்கு வந்தனர். அவர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளுடன் விடுதிக்குச் சென்றனர். ராகுல், அவரது பெற்றோர் மற்றும் நண்பர் என நான்கு பேரையும் சரமாரியாக வெட்டினர்.

அதன்பின்னர், மணப்பெண்ணை வலுக்கட்டாயமாக தங்கள் உறவினர்கள் கூட்டிக்கொண்டு சென்றனர். காயமடைந்த நான்கு பேரும் நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டனர். இது குறித்து வேளாங்கண்ணி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். மணப்பெண்ணை அழைத்துக் கொண்டு பெங்களூருவுக்குத் தப்ப முயன்ற ஒன்பது பேரையும் போலீசார் சுற்றி வளைத்துப் பிடித்தனர். அவர்களைக் கைது செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் வேளாங்கண்ணியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!