undefined

 உறவினர் கண்டித்ததால் விபரீதம்... மாணவன் விஷம் குடித்து தற்கொலை!

 
தூத்துக்குடி மாவட்டம், மெஞ்ஞானபுரம் அருகே கடையில் சிகரெட் வாங்கியதை உறவினர் பார்த்து கண்டித்ததால் மனமுடைந்த பள்ளி மாணவன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டான்.

தூத்துக்குடி மாவட்டம், மெஞ்ஞானபுரம் அருகே உள்ள தாய்விளை நடுத்தெருவை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி அமுதா. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். குடும்பத் தகராறு காரணமாக கணவரை பிரிந்து மகன்களுடன் அமுதா தனியாக வசித்து வருகிறார். 

இவரது மூத்த மகன் சபரிமுத்து (14) மெஞ்ஞானபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறான். தற்போது கோடை விடுமுறையில் வீட்டில் இருந்து வருகிறான்.இந்நிலையில் அங்குள்ள கடையில் அவன் சிகரெட் வாங்கியுள்ளான். அதை அவரது பெரியம்மா முத்துலெட்சுமி பார்த்து கண்டித்துள்ளார். இதனால் அம்மாவுக்கு தெரிந்துவிடும் என்று நினைத்து அவன் மனமுடைந்து காணப்பட்டுள்ளான். 

இந்நிலையில் வீட்டில் இருந்த விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் களைக்கொல்லி மருந்தினை குடித்துள்ளார். சிறிது நேரத்தில் வாந்தி எடுத்த அவனை தாயார் மீட்டு நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவன் பரிதாபமாக இறந்தான். இதுகுறித்து மெஞ்ஞானபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது