கதறிய உறவினர்கள்... 6 வயது மகளைக் கொன்று தந்தை தற்கொலை!
கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் சேர்த்தலாவைச் சேர்ந்த பவிசங்கர் (33), வேலை இழப்பு மற்றும் கடன் நெருக்கடி காரணமாகத் தனது பிஞ்சு மகளுடன் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பவிசங்கர் தனது மனைவி ஸ்னாஷா (28) மற்றும் 6 வயது மகள் வாசுகியுடன் எளமக்கரா அருகே போனேக்கரா பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். எர்ணாகுளத்தில் ஒரு கடையில் வேலை பார்த்து வந்த பவிசங்கர், சமீபகாலமாக வேலையில்லாமல் வீட்டில் இருந்துள்ளார்.
ஸ்னாஷா ஒரு வணிக வளாகத்தில் வேலை பார்த்து வருகிறார். நேற்று இரவு 11 மணி அளவில் அவர் வேலை முடிந்து வீடு திரும்பியபோது, கதவு உள்பக்கமாகத் தாழிடப்பட்டிருந்தது. கணவரைப் பலமுறை அழைத்தும், செல்போனில் தொடர்பு கொண்டும் பலன் கிடைக்கவில்லை.
உறவினர்கள் மற்றும் போலீசார் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்றபோது, படுக்கையறையில் சிறுமி வாசுகி சடலமாகக் கிடந்தாள். பவிசங்கர் மின்விசிறியில் தூக்கிட்ட நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.
எளமக்கரா போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் சில திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன: 1-ம் வகுப்பு படித்து வந்த சிறுமி வாசுகிக்கு, தந்தை பவிசங்கரே விஷம் கொடுத்துக் கொன்றது தெரிய வந்தது. வேலையில்லாத காரணத்தால் ஏற்பட்ட கடுமையான கடன் சுமையே இந்தத் தீவிர முடிவுக்குக் காரணம் எனப் போலீசார் கருதுகின்றனர். இருவரின் உடல்களும் களமச்சேரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!