undefined

குடியரசு தின அணிவகுப்பில் கம்பீரமாக ஜல்லிக்கட்டு  தமிழக வாகனம்… ! 

 

நாட்டின் 77-வது குடியரசு தின விழா இன்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. டெல்லி கடமைப் பாதையில் நடைபெற்ற விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு தேசிய கொடியை ஏற்றினார். இதனைத் தொடர்ந்து இந்தியாவின் படை வலிமை மற்றும் பன்முக கலாசாரத்தை வெளிப்படுத்தும் அணிவகுப்பு நடைபெற்றது.

இந்த அணிவகுப்பில் தமிழக அரசின் அலங்கார வாகனம் இடம்பெற்றது. வாகனத்தின் முகப்பில் ஜல்லிக்கட்டு காளையை மாடுபிடி வீரர்கள் அடக்கும் காட்சி வடிவமைக்கப்பட்டிருந்தது. இது பார்வையாளர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்தது.

தமிழ்நாட்டு பண்பாட்டை பறைசாற்றும் வகையில் வாகனத்தின் இருபுறமும் கலைஞர்கள் சிலம்பாட்டம் மற்றும் மயிலாட்டம் ஆடியபடி சென்றனர். தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரி, உத்தரப்பிரதேசம், மேற்குவங்கம், மத்திய பிரதேசம் மற்றும் பஞ்சாப் மாநிலங்களின் வாகனங்களும் அணிவகுத்தன.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!