கவர்னர் மாளிகையில் குடியரசு தின தேநீர் விருந்து… திமுக புறக்கணிப்பு!
ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தையொட்டி சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் தேநீர் விருந்து நடத்தப்படுவது வழக்கம். இதில் அரசியல் தலைவர்கள், நீதித்துறை உறுப்பினர்கள், உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்பார்கள். அந்த வகையில் 77-வது குடியரசு தினத்தை முன்னிட்டு இன்று கவர்னர் மாளிகையில் தேநீர் விருந்து நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி, நீதிபதிகள் மற்றும் சென்னை காவல் ஆணையாளர் அருண் பங்கேற்றனர். முன்னாள் கவர்னர்கள், மூத்த ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். தமிழக அரசின் தலைமை செயலாளர் முருகானந்தமும் விருந்தில் பங்கேற்றார்.
அரசியல் கட்சித் தலைவர்களாக அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், வளர்மதி, வைகைச்செல்வன், பா.ஜ.க. முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், பா.ம.க., புதிய நீதிக்கட்சி, புதிய தமிழகம் மற்றும் தே.மு.தி.க. பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இதே நேரத்தில் கவர்னர் ஆர்.என். ரவியின் தேநீர் விருந்தை திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் புறக்கணித்தன.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!