undefined

டிஜிட்டல் மோசடியில் பணம் இழந்தால் ரூ.25,000 வரை இழப்பீடு… ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு!

 
 

 

நாடு முழுவதும் அதிகரித்து வரும் டிஜிட்டல் மோசடிகளை கட்டுப்படுத்த புதிய நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. டிஜிட்டல் மோசடியில் பணம் இழக்கும் வாடிக்கையாளர்களுக்கு சம்பந்தப்பட்ட வங்கிகள் மூலம் அதிகபட்சமாக ரூ.25,000 வரை இழப்பீடு வழங்கப்படும் என ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார். 2025-ம் ஆண்டு மட்டும் டிஜிட்டல் மோசடிகளால் சுமார் ரூ.20,000 கோடி இழப்பு ஏற்பட்டதுடன், 21 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

டிஜிட்டல் மோசடிகளை தடுக்க விரைவில் 3 புதிய வரைவுக் கொள்கைகள் வெளியிடப்பட உள்ளன. இதில் மோசடியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கும் நடைமுறை, மோசடிகளை தடுக்கும் கடுமையான விதிமுறைகள் மற்றும் கடன் வசூல் நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்தும் வழிமுறைகள் இடம்பெறும். குறிப்பாக முதியோர் மேற்கொள்ளும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் பாதுகாப்பை அதிகரிக்கும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட உள்ளன. மேலும் நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளின் செயல்திறனை மேம்படுத்த ஊழியர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்கும் திட்டமும் தொடங்கப்பட உள்ளது.

இதற்கிடையில் ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்றும், அது 5.25 சதவீதமாகவே தொடரும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. நாட்டின் பொருளாதார வளர்ச்சி நிலை திருப்திகரமாக இருப்பதாக கூறப்பட்ட நிலையில், 2026-ம் ஆண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 7.4 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லாததால் வீடு மற்றும் வாகனக் கடன்களின் வட்டியிலும் மாற்றம் இருக்காது என வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!