இந்தியா முழுவதும் வங்கிகளில் உரிமை கோரப்படாத ரூ60000 கோடி ரிசர்வ் வங்கிக்கு மாற்றம்!
இந்தியாவின் பல்வேறு பொதுத்துறை வங்கிகளில் நீண்ட காலமாக உரிமைகோாரப்படாமல் கிடந்த சுமார் 60,518 கோடி ரூபாய் வைப்புத்தொகை, தற்போது இந்திய ரிசர்வ் வங்கியின் வசமானது. கடந்த ஜனவரி மாத இறுதி நிலவரப்படி, கணக்கில் காட்டப்படாமல் முடங்கிக் கிடந்த இந்த பிரம்மாண்டத் தொகையை, வாடிக்கையாளர் விழிப்புணர்வு நிதிக்கு (DEAF) மாற்றியுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.
வங்கி டெபாசிட்டுகள் மட்டுமின்றி, காப்பீடு துறையிலும் சுமார் 8,973 கோடி ரூபாய் பணம் க்ளைம் செய்யப்படாமல் முடங்கியுள்ளது. அதேபோல், மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளில் சுமார் 3,749 கோடி ரூபாய்க்கு மேல் முதலீட்டாளர்கள் யாரும் உரிமை கோரவில்லை என மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி தெரிவித்துள்ளார். இவ்வளவு பெரிய தொகை யாருடையது என்பதை அடையாளம் காணும் பணிகளைத் தீவிரப்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது.
பணம் செலுத்தியவர்கள் இறந்துவிட்டாலோ அல்லது கணக்கு விவரங்களை வாரிசுகளிடம் சொல்லாமல் விட்டாலோ இது போன்ற நிலுவைத் தொகைகள் வங்கிகளில் தேங்குகின்றன. இப்படி உரிமை கோரப்படாத பணத்தைச் சொந்தக்காரர்களிடம் ஒப்படைக்க 'உத்கம்' (UDGAM) போன்ற இணையதள வசதிகளை ரிசர்வ் வங்கி ஏற்கெனவே அறிமுகப்படுத்தியுள்ளது. உங்கள் தாத்தா, பாட்டி காலத்து சேமிப்பு ஏதேனும் வங்கியில் தூங்கிக் கொண்டிருக்கிறதா என ஒருமுறை சரிபார்ப்பது நல்லது!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!