நெகிழ்ச்சி வீடியோ ... ஜெகன் அண்ணா... ஜெகன் அண்ணா… கதறி அழுத சிறுமி!
ஆந்திர மாநிலத்தில் முன்னாள் ஆந்திர முதல்வரும், YSR Congress Party தலைவருமான ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி இப்போது ஆட்சியில் இல்லை. ஆனாலும் கூட அவருக்கு மக்கள் கொடுக்கும் ஆதரவு உள்ளத்தில் இருந்து வருவதை பலமுறை பார்த்திருக்கிறோம். குறிப்பாக அவர் எதாவது வெளியிடங்களுக்கு சென்றால் கூட அவர் வருவதை அறிந்து மக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுப்பார்கள்.
நேற்று அவரது கட்சியின் முக்கிய நிர்வாகியான வல்லபனேனி வம்சியை சந்திக்க விஜயவாடா சென்றுள்ளார். அப்போது வருவதை அறிந்த மக்கள் உடனடியாக அவருடைய காரை வழிமறித்து கூட்டமாக நின்று உற்சாக வரவேற்பு அளித்தனர்.
ஜெகன் மோகன் ரெட்டி காரில் இருந்து வெளியே வந்து அந்த சிறுமியை தன்னுடைய கைகளில் வாங்கி கொண்டு பாசமாக முத்தம் கொடுத்தார். ஜெகன் மோகன் ரெட்டியை பார்த்த இன்ப அதிர்ச்சியில் அந்த பெண் தலைகால் புரியாத சந்தோஷத்தில் இருந்ததும் வீடியோ பார்க்கும்போது தெரிந்தது.
பிறகு அந்த சிறுமி தன்னுடைய போனில் ஜெகன் மோகன் ரெட்டியுடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டுள்ளார். இது குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!