ஆக்கிரமிப்பு பகுதியில் போராட்டம்.. தாய், மகள் உயிரோடு தீ வைத்து எரித்து கொலை! 

 

உத்தர பிரதேசத்தில் அரசு இடத்தில் சட்டவிரோதமாக குடியிருப்பவர்களை அகற்ற மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில், கான்பூர் திகாத் பகுதிக்கு உட்பட்ட மராவ்லி என்ற கிராமத்தில் சட்டவிரோத குடியிருப்புகளை அகற்றும் பணிக்கு அதிகாரிகள் சென்றனர்.

ஆக்கிரமிப்பை அகற்றுவதற்காக அதிகாரிகள் வந்ததை அறிந்த மக்கள், வீட்டில் இருந்து வெளியே வராமல் எதிர்ப்பு தெவித்தனர். மீறினால் குளித்து விடுவோம் என்றும் மிரட்டி உள்ளனர். எனினும் அதிகாரிகள் மக்களை வெளியேறி ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கையில் இறங்கினர்.

இந்நிலையில், திடீரென ஒரு வீட்டில் தீப்பிடித்து எரிந்தது. அதில் இரண்டு பெண்கள் சிக்கியிருந்ததால் பரபரப்பு  ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் வீட்டில் இருந்த பிரமீளா தீட்சித் (44) மற்றும் அவரது மகளான நேஹா தீட்சித் (22) ஆகிய இருவர் தீயில் சிக்கி உயிரிழந்து உள்ளனர். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் உருவானது.

காவல் துறையினர் குவிக்கப்பட்டு அங்கு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. இது பற்றி பிரமீளாவின் மகன் சிவம் தீட்சித் கூறுகையில், அதிகாரிகள் உள்ளிட்ட பிற நபர்கள் வீட்டுக்கு தீ வைத்தனர். இதில் நானும், எனது தந்தையும் உயிர் தப்பினோம். ஆனால் தாயாரும், சகோதரியும் தீயில் சிக்கி உயிரிழந்தனர் என கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

இது குறித்த புகாரின் பேரில் 12க்கும் மேற்பட்ட அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. எனினும், வீடு தீ பிடித்து எரிந்ததற்கான சரியான காரணம் எதுவென தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?