வார பலன்கள்... இந்த 4 ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய காலம் இது!
இந்த வாரம் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு யோக பலன்கள் என்று பார்க்கலாம் வாங்க. இந்த வாரம் பொதுவாக மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம் ஆகிய ராசிக்காரர்களுக்கு யோக பலன்கள் தேடி வரும்
மேஷம்: உங்களுக்கு மறக்க முடியாத நாளாக அமையும். நீங்கள் எடுக்கும் முயற்சிகள் இலக்குகளை அடைய வழிவகுக்கும். பணியிடத்தில் பாராட்டுகளைப் பெறுவீர்கள். உங்கள் திறமைகளைப் பயன்படுத்திப் பணிகளைச் குறித்த நேரத்தில் முடித்து, நல்ல முன்னேற்றம் காண்பீர்கள்.
கடகம்: உங்களுக்கு மிகவும் அதிர்ஷ்டகரமான நாள். முக்கியமாக, குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியான தருணங்கள் காணப்படும். மண வாழ்வில் இருந்த மனஸ்தாபங்கள் நீங்கி, புரிதல் அதிகரிக்கும். வியாபாரம், வர்த்தகம் தொடர்பான துறையில் இருப்பவர்கள் நல்ல வளர்ச்சியை எதிர்பார்க்கலாம்.
ரிஷபம் , மிதுனம்: இந்த ராசிக்காரர்களுக்கு இன்று நல்ல ஆதாயங்கள் மற்றும் சாதகமான திருப்பங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. கடின உழைப்பிற்கு ஏற்ற பலன் கிடைக்கும். முக்கியமாக, நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம் ஆகிய ராசியில் பிறந்தவர்கள் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம்.
விருச்சிகம்: உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டிய வாரம் இது. சின்ன விஷயங்களைக்கூடப் பெரிதாக்கி, குடும்ப உறுப்பினர்களைப் புண்படுத்த நேரிடலாம். இன்று தங்கள் நெருங்கிய உறவினர்களுடன் வியாபாரம் செய்பவர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். ரகசிய விவகாரங்கள் உங்கள் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கக்கூடும், கவனம் தேவை.
துலாம்: இந்த வாரம் முழுவதும் உங்களுக்கு அதிக யோக பலன்கள் கிடைத்தாலும், வாரத்தின் முதல் நாளான இன்று உத்தியோகத்தில் பேசும் வார்த்தைகளில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். பண வரவு அதிகரிக்கும், ஆனால் கோபத்தைத் தவிர்த்தால் வெற்றி மேல் வெற்றி கிடைக்கும்.
சிம்மம் மற்றும் கன்னி: இந்த வாரம் உங்களுக்கு ஏற்ற இறக்கங்கள் நிறைந்த வாரமாக அமையலாம். தேவையற்ற அலைச்சலைக் குறைத்துக் கொள்வது நல்லது. நிதி விஷயங்களில் நிதானமும், குடும்ப விஷயங்களில் விட்டுக்கொடுத்தலும் உங்களை வாழ்க்கையை சீராக்கும்.
தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த வாரம் முன்னேற்றத்திற்கான பாதைகள் புலப்படும்.
தனுசு: வெளிநாட்டுத் தொடர்புகள் மூலம் ஆதாயம் கிடைக்கும் வாரம். நல்ல வாய்ப்புகளை மிஸ் பண்ணாதீங்க. பொருளாதார நிலை மேம்பட வாய்ப்புள்ளது. வெளிநாட்டில் தங்கி இருக்கும் நபர்களின் உதவி கிடைக்கும். புதிய முதலீடுகளுக்கான வாய்ப்புகளும் தேடி வரும்.
கும்பம்: மகிழ்ச்சி மற்றும் நிம்மதியை மீட்டுக் காணும் வாய்ப்புள்ள வாரம். பணியிடத்தில் உங்கள் முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களின் ஒத்துழைப்பு உங்களுக்குப் பலத்தை அளிக்கும்.
மகரம் மற்றும் மீனம்: இந்த ராசிக்காரர்களுக்கு முன்னேற்றமும் நம்பிக்கையும் தரும் வாரமாக அமையும். மனத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கி, தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். உங்கள் திட்டங்கள் சரியான பாதையில் செல்லத் தொடங்கும். தொழிலில் வெற்றிக்கான அறிகுறிகள் தெரியும்.
குறிப்பு: ஜோதிடப் பலன்கள் பொதுவான கணிப்புகளே. ஒருவரின் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொறுத்து இதில் மாற்றங்கள் இருக்கலாம். உங்கள் நாளுக்கான திட்டங்களைச் செயல்படுத்துவதில் உங்கள் தன்னம்பிக்கையும் கடின உழைப்பும் தான் பிரதான பங்கு வகிக்கிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!