பஹல்காம் முதல் ‘ஆபரேஷன் சிந்தூர்’ வரை… 2025-ஐ உலுக்கிய இந்தியா–பாகிஸ்தான் மோதல்!
பஹல்காமில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 2019 புல்வாமாவுக்கு பிறகு காஷ்மீரில் நடந்த மிகப்பெரிய தாக்குதல் இதுவாகும். தாக்குதலுக்கு லஷ்கர் நிழல் அமைப்பு பொறுப்பேற்றது. இதைத் தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தானுடனான தூதரக உறவுகளை துண்டித்தது. சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்திவைக்கப்பட்டது. எல்லைகள் மூடப்பட்டன. நாடு முழுவதும் கடும் பதற்றம் நிலவியது.
மே 7 நள்ளிரவில் இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையை தொடங்கியது. பாகிஸ்தான் மற்றும் பாக்.ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்த 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. 4 நாட்கள் இரு நாடுகளுக்கும் இடையே கடும் ராணுவ மோதல் நடந்தது. ட்ரோன், ஏவுகணை, ஷெல் தாக்குதல்கள் நடைபெற்றன. எல்லையோர கிராமங்களில் பொதுமக்கள் உயிரிழந்தனர். அணு ஆயுத நாடுகள் நேருக்கு நேர் வந்ததால் உலக நாடுகள் கவலையடைந்தன.
அமெரிக்க தலையீட்டால் போர் நிறுத்தம் ஏற்பட்டதாக டிரம்ப் அறிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தியா அதை மறுத்தது. விமானங்கள் வீழ்த்தப்பட்டனவா என்ற கேள்வி அரசியலாக மாறியது. நாடாளுமன்றத்தில் கடும் விவாதம் நடந்தது. டிரம்ப்–மோடி உறவில் விரிசல் என்ற பேச்சுகள் எழுந்தன. உண்மையில் என்ன நடந்தது என்ற கேள்விகள் விடை பெறாமல் உள்ளன. 2025 முடிகிறது. பதில்கள் 2026-ல் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பே மீதமுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!