விஜய் கட்சிக்கு ‘மோதிரம்’ சின்னம்? தவெக தொண்டர்கள் உற்சாகம் !
தமிழக அரசியலில் புதிய அலை எழுப்பி வரும் நடிகர் விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகம்’ 2026 தேர்தலை நோக்கி தீவிர முன்னேற்பாடுகளில் இறங்கியுள்ளது. தேர்தல் ஆணையத்தில் 10 சின்னங்களைச் சமர்ப்பித்த நிலையில், அவற்றில் இருந்து ‘மோதிரம்’ சின்னமே தேர்வாகலாம் என்ற தகவல் தவெக வட்டாரங்களில் பரவியுள்ளது.
பெண்கள் மனதைக் கவரும், மக்களிடம் எளிதில் சென்றடையும் சின்னம் இருக்க வேண்டும் என்பதே விஜய்யின் விருப்பம் என கூறப்படுகிறது. அந்த கோரிக்கைக்கு ஏற்றதும், தனித்துவமான பிராண்டாக மாறக்கூடியதுமாக ‘மோதிரம்’ இருப்பதாக கட்சி நிர்வாகிகள் நம்புகிறார்கள். மேலும் 4 தமிழ் எழுத்துகளுக்கான உருவகப் பொருள் கொண்ட சின்னம் வரலாம் என்றும் பேசப்படுகிறது. இந்த அறிவிப்பை தொண்டர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.
சாதி ஒழிப்பு, சமூக நீதி போன்ற கோரிக்கைகளை முன்னிறுத்தி வரும் தவெக, தனது சின்னத்தின் மூலம் அந்த உணர்வை மக்கள் மனதில் பதியச் செய்யத் திட்டமிட்டு வருகிறது. சின்னம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டவுடன், அதை விளக்கும் பிரச்சார நடவடிக்கைகளில் கட்சி முழுவீச்சில் இறங்கும். மொத்தத்தில், ‘மோதிரம்’ உறுதியானால், விஜய்யின் அரசியல் பயணத்தில் இது ஒரு பெரிய மைல்கல் என அரசியல் ஆய்வாளர்கள் கணிக்கின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!