ரிஷிகேஷில் கங்கை அருகே மது அருந்திய பெண் - தட்டிக்கேட்ட போலீசாருடன் வாக்குவாதம் - வைரலாகும் வீடியோ!
உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷில், புனிதமான கங்கை ஆற்றங்கரையில் மது அருந்திய சுற்றுலாப் பயணி ஒருவர், அதைத் தட்டிக்கேட்ட போலீசாரிடம் திமிராகப் பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிப் பெரும் கண்டனத்தைப் பெற்று வருகிறது.இமயமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள ரிஷிகேஷ், இந்துக்களின் புனிதத் தலமாகக் கருதப்படுகிறது. இங்கு ஓடும் கங்கை ஆற்றின் தூய்மையையும் புனிதத்தையும் காக்க, மது அருந்துவதற்கும் அசைவ உணவுகளை உண்பதற்கும் அரசு கடும் தடை விதித்துள்ளது. இந்நிலையில், அரியானா மாநிலத்திலிருந்து சுற்றுலா வந்த ஒரு பெண், தனது கணவருடன் சேர்ந்து கங்கை ஆற்றங்கரையோரம் பகிரங்கமாக மது அருந்தியுள்ளார்.
போலீசார் எச்சரிக்கை விடுத்துக் கொண்டிருந்த போதே, அந்தப் பெண் தனது கணவருடன் அங்கிருந்த காரில் ஏறி வேகமாகப் புறப்பட்டுச் சென்றார். அந்தப் பெண் பேசிய வீடியோவை அங்கிருந்தவர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட, தற்போது அது வைரலாகி வருகிறது. “சுற்றுலாப் பயணிகள் என்ற பெயரில் புனிதத்தலங்களுக்கு வருபவர்கள் அந்த இடத்தின் கலாச்சாரத்தையும் விதிகளையும் மதிக்க வேண்டும்” எனப் பலரும் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!