undefined

எகிறும் எதிர்பார்ப்பு... ரசிகர்கள் கொண்டாட்டம்... இன்று வெளியாகிறது சிவகார்த்திகேயனின் 'பராசக்தி'!

 

1965-ல் தமிழகத்தில் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை மையமாகக் கொண்டு உருவான 'பராசக்தி' திரைப்படம், அரசியல் காரணங்களால் தணிக்கைச் சான்றிதழ் பெறுவதில் கடும் சவால்களைச் சந்தித்தது.

படத்தில் இடம்பெற்ற சில உணர்ச்சிகரமான வசனங்கள் மற்றும் காட்சிகளை நீக்க தணிக்கை வாரியம் பிடிவாதம் காட்டியது. இது தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தலையிட்டு, சில சமரசங்களுக்குப் பிறகு படத்தை வெளியிட அனுமதி அளித்தது.

நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, தணிக்கை வாரியம் நேற்று மாலை இப்படத்திற்கு 'U/A' (யு/ஏ) சான்றிதழ் வழங்கியது. இப்படத்தின் மொத்த ஓடும் நேரம் (Run Time) 2 மணி நேரம் 43 நிமிடங்கள் எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ஜெயம் ரவி மற்றும் அதர்வா ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளதால், இது ஒரு மல்டி-ஸ்டாரர் படமாகப் பார்க்கப்படுகிறது. இன்று படம் பல பிரச்சனைகளுக்குப் பின் வெளியாக உள்ள நிலையில், ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எகிறி உள்ளது. பொங்கல் ரேஸில், ஜனநாயகன் படம் ரிலீஸாகாத நிலையில், தனிக்காட்டு ராஜாவாக வசூலை அள்ள காத்திருக்கிறது பராசக்தி. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!