undefined

எகிறும் எதிர்பார்ப்பு... நாளை 2026க்கான பத்ம விருதுகள் அறிவிப்பு!

 

பத்ம விருதுகள் நாளை அறிவிக்கப்பட உள்ள நிலையில், யார் யாருக்கு பத்ம விருதுகள் கிடைக்கும் என்கிற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் கலை, சமூகம், தொழில் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பாக பங்காற்றியவர்களை கெளரவிக்கும் வகையில், இந்திய அரசின் சார்பில் ஆண்டுதோறும் பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.

நாட்டின் உயரிய சிவில் விருதுகளாக கருதப்படும் இந்த விருதுகள், பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்ம ஸ்ரீ என மூன்று பிரிவுகளில் வழங்கப்படுகின்றன. கலை, இலக்கியம், அறிவியல், மருத்துவம், விளையாட்டு, சமூக சேவை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். நாட்டின் வளர்ச்சிக்கு பங்களித்தவர்களின் உழைப்பை அங்கீகரிக்கும் வகையில் இந்த விருதுகள் பெரும் மதிப்பைப் பெற்றுள்ளன.

குடியரசு தினத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் பத்ம விருதுகள் அறிவிக்கப்படுகின்றன. அந்த வகையில், 2026ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் நாளை ஜனவரி 25ம் தேதி அறிவிக்கப்பட உள்ளன. இந்த அறிவிப்பை நாடு முழுவதும் மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!