undefined

எகிறும் எதிர்பார்ப்பு... இன்று இந்தியா வரும் புதின் பிரதமர் மோடியுடன் சந்திப்பு... 70,000 இந்தியர்களுக்கு வேலைவாய்ப்பு!

 

இன்று இரஷ்ய அதிபர் விளாதிமீர் இந்தியா வரும் நிலையில், இந்த பயணத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பின் போது, இரஷ்யாவில் சுமார் 70,000 இந்தியப் பணியாளர்களுக்குப் பணிவாய்ப்பை உறுதி செய்வது தொடர்பான ஒரு முக்கியமான ஒப்பந்தம் கையொழுத்தாக இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.

இரஷ்யாவின் பொருளாதாரம் தற்போது வேகமாக வளர்ந்து வருகிறது. ஆனால் அங்கு திறமையான மற்றும் தகுதிவாய்ந்த பணியாளர்களுக்குத் தொடர்ந்து பற்றாக்குறை இருந்து வருகிறது. இந்தத் தேவையைப் பூர்த்தி செய்யும் நோக்குடன், இரஷ்ய தொழிலாளர் அமைச்சகத்தின் ஒதுக்கீட்டின்கீழ், நடப்பு ஆண்டின் இறுதிக்குள் 70,000க்கும் மேற்பட்ட இந்தியா்கள் இரஷ்யா முழுவதும் அதிகாரபூர்வமாகப் பணியமா்த்தப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா-இரஷ்யா இடையே கையொப்பமாகவுள்ள இந்த ஒப்பந்தம், தொழிலாளா்களின் சட்டபூர்வமான இடம்பெயர்வு மற்றும் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான மிகவும் வலுவான கட்டமைப்பை உருவாக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம், தற்போது இரஷ்யாவில் பணிபுரியும் இந்தியத் தொழிலாளர்களுக்கும் சட்டப் பாதுகாப்பை உறுதி செய்யும்.

கட்டுமானம், ஜவுளி, பொறியியல், மின்னணுவியல் போன்ற முக்கியத் தொழில்துறைகளில் ஆயிரக்கணக்கான புதிய நிபுணர்களின் பணியமர்த்தலுக்கு இந்த ஒப்பந்தம் வழிவகுக்கும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மாஸ்கோவைச் சேர்ந்த இந்திய வர்த்தகக் கூட்டமைப்பு (IBA) இந்த ஒப்பந்தத்தை வரவேற்றுள்ளதுடன், "இந்தியா-இரஷ்யா உறவுகளை விரிவுபடுத்துவதில் இந்த ஒப்பந்தம் ஒரு முக்கியமான மைல்கல்" என்று குறிப்பிட்டுள்ளது. மோசடியாளர்களால் பணியமர்த்தப்படும் சட்டமீறல்களைத் தவிர்க்கும் நோக்குடன், IBA சில திட்டங்களை அறிவித்துள்ளது.

இரஷ்யாவில் பணியமர்த்தப்படும் இந்தியத் தொழிலாளர்களுக்கான பயிற்சி மற்றும் மொழித் திட்டங்களை ஏற்பாடு செய்தல். நியாயமான ஆள்சேர்ப்பு வழிகள் மற்றும் நெறிமுறையான வேலைவாய்ப்புத் தரங்களை மேம்படுத்த, இரு அரசுகள் மற்றும் வணிகக் கூட்டாளிகளுடன் இணைந்து பணியாற்றுதல். இரஷ்யாவில் பணிபுரியும் இந்தியர்களின் நலனை உறுதிசெய்ய, மாஸ்கோவில் உள்ள இந்தியத் தூதரகத்துடன் இணைந்து செயல்படுதல்.

இந்த ஒப்பந்தம் குறித்துப் பேசிய IBA தலைவர் ஷம்மி மனோஜ், "உலகிலேயே மிகவும் ஆற்றல்மிக்க மற்றும் திறமையான பணியாளர்களை இந்தியா கொண்டுள்ளது. இரஷ்யா ஒரு பெரிய தொழில்துறை மாற்றத்திற்கு உள்ளாகி வரும் நிலையில், இந்த ஒப்பந்தம் இரு தரப்பினருக்கும் பரஸ்பர வெற்றி வாய்ப்பை உருவாக்குகிறது. இரஷ்யாவின் பொருளாதாரத்துக்குத் திறமையான பணியாளர்களை வழங்குவதுடன், இந்தியா்களுக்குப் பாதுகாப்பான மற்றும் கண்ணியமான வேலைவாய்ப்பை இந்த ஒப்பந்தம் உறுதி செய்கிறது" என்று தெரிவித்துள்ளார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!