பால் தட்டுப்பாடு உருவாகும் அபாயம்!! மார்ச் 11ல் பால் நிறுத்தப் போராட்டம்!! 

 

தமிழகத்தில் ஆவின் பால் உற்பத்தி அரசு சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. விற்பனையாளர்கள் பாலுக்கான கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி கோரிக்கை விடுத்தனர். அதன் அடிப்படையில் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டது. அதே போல் பாலின் விலையும் கணிசமாக உயர்த்தப்பட்டது.இந்த உயர்வு போதாது.  தனியார் பால் நிறுவனங்களில் கொள்முதல் விலை ஆவின் கொள்முதலை விட அதிகம். இதனால் கொள்முதல் விலையை மேலும் உயர்த்தி வழங்க வேண்டும் என மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த கோரிக்கையை பரிசீலிக்காவிடில் மார்ச் 11ம் தேதி  தமிழகம் முழுவதும்  பால் நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என  தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி ஒரு லிட்டர் பாலுக்கு ஆவின் ரூ.30ம், தனியார் பால் நிறுவனங்கள் ரூ.45 வரை கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதனை உறுதி செய்யும் வகையில் மதுரை பால் பண்ணையில் பொது மேலாளரை சந்தித்து தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம், பால் கொள்முதலுக்கான விலையை உயர்த்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் எங்களது கோரிக்கையை அரசு உடனடியாக நிறைவேற்றாவிட்டால், மார்ச்  11ம் தேதி போராட்டம்  நடத்துவோம் எனவும் தெரிவித்துள்ளனர். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?