சாலை மறியல்… 92 பெண்கள் உட்பட 183 கிராம உதவியாளர்கள் கைது!
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காலமுறை ஊதியம் வழங்கக் கோரி கிராம உதவியாளர்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு கிராம உதவியாளர்கள் சங்கம் மாவட்ட கிளை சார்பில் கடந்த 5 நாட்களாக காத்திருப்பு போராட்டம் நடத்தி வந்த நிலையில் இந்த மறியல் நடைபெற்றது.
காஞ்சிபுரம் – வந்தவாசி சாலையில் நடைபெற்ற மறியல் காரணமாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் தி.முருகன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. மாநில துணைச் செயலாளர் என்.நாராயணன், மாநிலச் செயலாளர் மகேந்திரபூபதி, மாவட்ட மகளிர் அணியின் துணைச் செயலாளர் அன்னபூரணி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
நான்காம் நிலைக்கு இணையான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடத்தப்பட்டது. சமாதான பேச்சுவார்த்தை நடத்தியும் மறியலை கைவிடாததால் போலீசார் நடவடிக்கை எடுத்து 92 பெண்கள் உள்பட மொத்தம் 183 பேரை கைது செய்தனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!