நகைக்கடைக்குள் மிளகாய்ப் பொடி தூவி கொள்ளையடிக்க முயற்சி... கத்தி கூச்சலிட்ட கடைக்காரர்!
சேலம் சூரமங்கலம் அருகே உள்ள சேலத்தம்பட்டி பகுதியை சேர்ந்த சுமதி (40), தனது “ஶ்ரீ ஹரி ஜூவல்லர்ஸ்” வெள்ளி நகைக் கடையில் வியாபாரம் செய்து வருகிறார். வியாழக்கிழமை பிற்பகல் சுமார் 1 மணியளவில், தலைக்கவசம் அணிந்த ஒரு நபர் கடைக்குள் புகுந்து சுமதியின் மீது மிளகாய்ப் பொடியை தூவி, கொள்ளையடிக்க முயன்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த மிளகாய்ப் பொடியின் தாக்கத்தை தாங்க முடியாமல் சுமதி பயங்கரமாக கூச்சலிட்டதால், பயந்த அந்த மர்ம நபர் திடீரென அங்கிருந்து தப்பிச் சென்றார். சம்பவம் அருகிலுள்ள சிசிடிவி கேமராவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சேலம் போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை தொடங்கியுள்ளனர். பொதுமக்கள், கடைக்காரர்களுக்கு பாதுகாப்பு ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை தெரிவித்து வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!