undefined

அதிகாலையில்  பயங்கரம்… தொழிலதிபரை கட்டிப் போட்டு,  மிரட்டி ரூ.25 லட்சம், 30 சவரன் கொள்ளை! 

 

புழல், மகாவீர் கார்டன் பகுதியை சேர்ந்த ஜவுளி அதிபர் விஜயகுமாரின் வீட்டில் பயங்கர கொள்ளை நடந்தது. நேற்று அதிகாலை 5 மணியளவில் முகமூடி அணிந்த 6 பேர் சுவர் ஏறி வீட்டுக்குள் புகுந்தனர். கதவைத் திறந்த விஜயகுமாரின் மனைவி வசந்தாவை கத்தி முனையில் மிரட்டி உள்ளே அழைத்துச் சென்றனர்.

பின்னர் கணவன்-மனைவி இருவரின் கைகளையும் கட்டி, வாயில் டேப் ஒட்டினர். சத்தம் கேட்டு வந்த வயதான தாய் லட்சுமி மற்றும் மகள்கள் சினேகா, பவித்ராவையும் கத்திமுனையில் கட்டுப்படுத்தினர். அனைவரையும் ஒரு அறையில் பூட்டிவிட்டு, விஜயகுமாரை மட்டும் அழைத்து பீரோவை திறக்க வைத்து ரூ.25 லட்சம் பணத்தை கொள்ளையடித்தனர்.

தொடர்ந்து குடும்பத்தினர் அணிந்திருந்த நகைகள் உள்ளிட்ட 30 பவுன் தங்க, வைர நகைகளை மூட்டையாக கட்டி காரில் தப்பினர். வேலைக்காரர்கள் வந்தபின் சம்பவம் வெளியானது. புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மோப்ப நாய், தடயவியல் உதவியுடன் விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளையர்களை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!