10 அடி நீளமுள்ள ராக்கெட் பாகம் நடுக்கடலில் மிதந்து வந்ததால் பரபரப்பு!
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே உள்ள கடல் பகுதியில், கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சுமார் 10 அடி நீளம் கொண்ட பிரம்மாண்டமான உருளை வடிவிலான மர்மப் பொருள் ஒன்று மிதந்து கொண்டிருந்தது. இதைக் கண்ட மீனவர்கள் அச்சமடைந்து கடலோரக் காவல் படையினருக்குத் தகவல் அளித்தனர். அந்தப் பொருள் ஏதேனும் வெடிக்கக்கூடிய ஏவுகணையா அல்லது வெளிநாட்டுச் சதி வேலையா எனப் பல்வேறு சந்தேகங்கள் எழுந்ததால், அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
இந்த மர்மப் பொருளை ஆய்வு செய்ய திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மைய (VSSC - ISRO) அதிகாரிகள் இன்று (மார்ச் 20, 2026) தொண்டிக்கு விரைந்தனர். அங்கிருந்து விசைப்படகு மூலம் சுமார் 2 கடல் மைல் தொலைவிற்கு நடுக்கடலுக்குச் சென்ற விஞ்ஞானிகள், அந்த உருளைப் பொருளைத் தீவிரமாகப் பரிசோதித்தனர். இறுதியாக, அது ராக்கெட் ஏவப்பட்ட பிறகு பிரிந்து கடலில் விழுந்த எரிபொருள் டேங்க் அல்லது அதன் உதிரிப்பாகம் என்பது உறுதி செய்யப்பட்டது.
"இந்தப் பொருளில் எந்தவிதமான வெடிபொருட்களோ அல்லது கதிரியக்க ஆபத்துகளோ இல்லை; இது விண்வெளிப் பயணத்தின் போது கடலில் விழுந்த ஒரு பாகம்தான்" என இஸ்ரோ அதிகாரிகள் விளக்கமளித்தனர். இதையடுத்து, அந்தப் பொருளைப் பத்திரமாக மீட்ட அதிகாரிகள், மேல் ஆய்விற்காகத் திருவனந்தபுரம் இஸ்ரோ மையத்திற்குக் கொண்டு செல்லத் திட்டமிட்டுள்ளனர். ஒரு வாரமாக நீடித்த மர்மம் முடிவுக்கு வந்ததால், ராமநாதபுரம் மீனவர்கள் தற்போது நிம்மதியடைந்துள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!