undefined

 650 சிக்ஸர்… வரலாறு படைத்த  ரோஹித் சர்மா! 

 
 

இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள கோடாம்பி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 300 ரன்கள் எடுத்தது.

301 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர் ரோகித் சர்மா அதிரடியாக ஆடினார். அவர் 2 சிக்ஸர்களை பறக்கவிட்டு 26 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். குறுகிய நேரத்தில் ரசிகர்களை உற்சாகப்படுத்திய ஆட்டமாக இது அமைந்தது.

இந்தப் போட்டியில் அடித்த 2 சிக்ஸர்களின் மூலம் ரோகித் சர்மா புதிய சாதனை படைத்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் 650 சிக்ஸர்கள் அடித்த முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையை அவர் பதிவு செய்துள்ளார். இந்த சாதனை, ஹிட்மேனின் நீண்ட கால அதிரடி பயணத்திற்கு மேலும் மெருகூட்டியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!