ரொனால்டோ மேலும் 2 ஆண்டுகள் அல்-நசீர் அணியில் ஒப்பந்தம்... வெளியான சம்பள விவரங்கள்!
சர்வதேச கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, சவுதி ப்ரோ லீக் அணியான அல் நசார் கால்பந்து க்ளப்பில் மேலும் 2 ஆண்டுகள் ஒப்பந்த நீட்டிப்பில் கையெழுத்திட்டுள்ளார். இதன் மூலம், அவர் அல் நாசரை விட்டு வெளியேறுவது குறித்த பல மாதங்களாக இருந்த ஊகங்களும் முடிவுக்கு வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அல் நாசருடன் ஒப்பந்த நீட்டிப்பில் கையெழுத்திட்டதன் மூலம், அவர் 2027 வரை சவுதி அரேபிய கிளப்பில் இருப்பார். இதனால், போர்ச்சுகலின் சிறந்த வீரரான ரொனால்டோ இப்போது குறைந்தது 42 ஆண்டுகள் வரை விளையாட முடியும், இது அவரது சாதனை வாழ்க்கையை நீட்டிக்க ஒரு வாய்ப்பாக அமையும்.
ஒப்பந்தத்தின் 2 வது ஆண்டைத் தொடங்கும்போது 38 மில்லியன் பவுண்டுகள் (சுமார் ரூ. 446 கோடி) ஆக அதிகரிக்கும். இது தவிர, தங்க காலணி வென்றதற்காக ரொனால்டோவுக்கு 4 மில்லியன் பவுண்டுகள் (சுமார் ரூ. 47 கோடி) போனஸும், அல் நாசர் பட்டத்தை வென்றால் 8 மில்லியன் பவுண்டுகள் (சுமார் ரூ. 94 கோடி) போனசும் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவர் தனியார் ஜெட் விமானத்தைப் பயன்படுத்துவதற்கு 4 மில்லியன் பவுண்டுகள் (சுமார் ரூ. 47 கோடி) மற்றும் சவுதி நிறுவனங்களுடன் 60 மில்லியன் பவுண்டுகள் (சுமார் ரூ. 705 கோடி) வரை அடையக்கூடிய ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தங்களும் உறுதி செய்யப்பட்டுள்ளன.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!