'ரூப் டாப் ஓப்பன்’ பேருந்துகள் ... சென்னையில் விரைவில்!
மாநகர போக்குவரத்துக்கழகம் சார்பில் பயணிகளின் அனுபவத்தை மேம்படுத்தும் நோக்கில் புதிய ‘ரூப் டாப் ஓப்பன்’ பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை நகரில் சுற்றுலாவை ஊக்குவிக்கவும் போக்குவரத்து வசதியை மேம்படுத்தவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது ‘சென்னை உலா’ சுற்றுலா பேருந்துகள் மற்றும் இரண்டு அடுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
மொத்தம் 20 இரண்டு அடுக்கு பேருந்துகளை இயக்க ஒப்பந்தம் ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளது. இதில் 4 பேருந்துகளை மேல் பகுதி திறந்த ‘ரூப் டாப் ஓப்பன்’ வடிவமாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. அனைத்து பேருந்துகளும் குளிர்சாதன வசதி கொண்டதாக இருக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த திட்டத்திற்கான ஒப்பந்த காலம் 12 ஆண்டுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பேருந்துகளை இயக்குதல், பராமரிப்பு மற்றும் சார்ஜிங் வசதிகளை அமைத்தல் போன்ற பணிகளை ஒப்பந்த நிறுவனமே மேற்கொள்ள உள்ளது. புதிய ‘ரூப் டாப் ஓப்பன்’ பேருந்துகள் விரைவில் நகர சாலைகளில் இயக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!