undefined

ரூட் க்ளியர்... பாமக தலைவர் அன்புமணிதான்.. தேர்தல் ஆணையம் அதிரடி!

 

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் இடையே கட்சித் தலைமை தொடர்பாக நிலவி வந்த சட்டப் போராட்டத்திற்குப் பிறகு, தேர்தல் ஆணையம் தனது இறுதி நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியுள்ளது.

டெல்லி உயர்நீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற மறுஆய்வு மனு மீதான விசாரணையின் போது, தேர்தல் ஆணையம், தேர்தல் ஆணையத்திடம் உள்ள ஆவணங்களின்படி, டாக்டர் அன்புமணி ராமதாஸ் தான் பாமக-வின் அதிகாரப்பூர்வ தலைவர் என்றும் 2026ம் ஆண்டு வரை அன்புமணியின் பதவிக்காலம் உள்ளதாக ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது.

அன்புமணிக்கு எதிராக ஏதேனும் சிவில் நீதிமன்ற உத்தரவு வந்தால் மட்டுமே இந்த ஆவணங்களில் மாற்றம் செய்ய முடியும். அதுவரை தற்போதைய நிலையே தொடரும் எனத் தேர்தல் ஆணையம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. இந்த விளக்கத்தின் மூலம், வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு படிவங்களில் கையெழுத்திடும் அதிகாரம் அன்புமணிக்கே உள்ளது என்பது உறுதியாகியுள்ளது: கட்சியின் சின்னமான மாம்பழம் சின்னம், அன்புமணி தலைமையிலான பாமக-வுக்கே ஒதுக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்பாக, ராமதாஸ் தரப்பினர் மாம்பழம் சின்னத்தை முடக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்த நிலையில், ஆணையத்தின் இந்த பதில் அவர்களுக்குப் பின்னடைவாகக் கருதப்படுகிறது.

2025ம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே தந்தை - மகன் இடையே கட்சியின் அதிகாரம் தொடர்பாக மோதல் நிலவி வந்தது. ராமதாஸ் தரப்பினர் அன்புமணியைக் கட்சியிலிருந்து நீக்கியதாக அறிவித்தனர். இதற்கிடையில், அன்புமணி ராமதாஸ் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக - பாஜக மெகா கூட்டணியில் இணையப் பேச்சுவார்த்தை நடத்தி முடிவை அறிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

தேர்தல் ஆணையத்தின் விளக்கத்தை ஏற்றுக்கொண்ட டெல்லி உயர்நீதிமன்றம், இது தொடர்பாக ராமதாஸ் தொடர்ந்த வழக்கை இன்று முடித்து வைத்து உத்தரவிட்டது. இதன் மூலம் பாமக-வில் நிலவி வந்த தலைமைச் சிக்கலுக்குத் தேர்தல் ஆணையம் ஒரு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!