undefined

 அரசு மருத்துவமனையில் ரவுடி ஆதி கேசவன் வெட்டிக் கொலை... பெரும் பரபரப்பு!

 
 

சென்னை ராஜமங்கலம் பகுதியைச் சேர்ந்த ரவுடி ஆதி கேசவன், இன்று அதிகாலை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை வளாகத்துக்குள் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். கொளத்தூர், ராஜமங்கலம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் பல வழக்குகள் நிலுவையில் உள்ள ஆதி, தனது மனைவி பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்ததால் மருத்துவமனைக்கு வந்ததாக கூறப்படுகிறது.

மனைவியை பார்த்துவிட்டு, மருத்துவமனையின் புதிய கட்டடத்தின் பின்புறம் நின்று கொண்டிருந்த போது, தலைக்கவசம் அணிந்த 4 பேர் கொண்ட கும்பல் மருத்துவமனைக்குள் வந்துள்ளது. அவர்களை கண்டதும் ஆதி தப்பி ஓட முயன்றார். ஆனால் கும்பல் அவரை விரட்டி, மருத்துவமனை வளாகத்துக்குள்ளேயே வெட்டி கொலை செய்தது.

சம்பவத்தை பார்த்த பொதுமக்கள் அலறியடித்து ஓடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து வந்த போலீசார், ஆதியின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி கொலையாளிகளை தேடி வரும் போலீசார், முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!