மதுபோதை தகராறில் ரவுடி கொண்டை மாரி வெட்டி கொலை!
கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே பால்குளத்தை சேர்ந்த மாரிமுத்து (34) என்கிற கொண்டை மாரி, செப்டிக் டேங்க சுத்தம் செய்யும் வாகனம் வைத்து தொழில் செய்து வந்தார். மனைவி மாரியம்மாளுடன் சுண்டன்பரப்பு நாச்சியார்குளம் கரையில் வசித்து வந்தார். நேற்று காலை வெளியே சென்ற அவர் வீடு திரும்பாததால், மனைவி போலீசில் புகார் அளித்தார்.
இந்த நிலையில் லீபுரம் கடற்கரை பகுதியில் வெட்டுக்காயங்களுடன் மாரிமுத்து பிணமாக கிடப்பதாக தகவல் வந்தது. போலீசார் விரைந்து சென்று விசாரித்ததில், அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டிருப்பது உறுதியானது. உடல் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது.
விசாரணையில், மாரிமுத்து அதே பகுதியை சேர்ந்த 4 பேருடன் மது அருந்தியதாக தெரியவந்தது. அப்போது பணம் தொடர்பாக தகராறு ஏற்பட்டதில் இந்த கொலை நடந்துள்ளது. அவருடன் இருந்த 4 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். ஏற்கனவே பல வழக்குகளில் தொடர்புடைய மாரிமுத்து ரவுடி பட்டியலிலும் இருந்ததால், இந்த சம்பவம் கன்னியாகுமரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!