பிரபல தொழிலதிபர் சி.ஜே. ராய் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை!
கான்ஃபிடன்ட் குரூப் நிறுவனத்தின் தலைவர் மற்றும் பிரபல தொழில் அதிபரான சி.ஜே. ராய் பெங்களூருவில் காலமானார். ரிச்மண்ட் வட்டம் அருகே உள்ள அவரது அலுவலகத்தில் ஏற்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி தொழில் வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2006ஆம் ஆண்டு கான்ஃபிடன்ட் குரூப்பை தொடங்கிய சி.ஜே. ராய், ரியல் எஸ்டேட் மட்டுமின்றி சுற்றுலா, விமான போக்குவரத்து, கல்வி மற்றும் சர்வதேச வர்த்தகத் துறைகளிலும் நிறுவனத்தை விரிவுபடுத்தினார். பெங்களூருவின் ரியல் எஸ்டேட் துறையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை கொண்டு வந்த இவர், வெளிநாடுகளிலும் தனது தொழிலை வளர்த்திருந்தார்.
கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்ட சி.ஜே. ராய் சமூக சேவைகளிலும் ஆர்வம் காட்டியவர். கேரள வெள்ள பாதிப்பின் போது வீடுகளை இழந்தவர்களுக்கு வீடுகள் கட்டி வழங்கியதும் குறிப்பிடத்தக்கது. அவரது மறைவு தொழில் துறையினருக்கும், அவரை அறிந்தவர்களுக்கும் ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!