undefined

ஜனவரி முதல் அனைத்து மகளிர்களுக்கும் உரிமைத் தொகை.. குட் நியூஸ் சொன்ன அமைச்சர்!

 

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை வருவாய்த்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார். இதையடுத்து இந்நிகழ்ச்சியில் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் பேசினார். அப்போது பேசிய அவர், 

கலைஞர் மகளிருக்கான உரிமைத் தொகை சிலருக்கு விடுபட்டுள்ளது. வரும் ஜனவரி மாதம் முதல் அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் பெண்களுக்கான உரிமைத் தொகை வழங்கப்படும். அதேபோல் முதியோர் உதவித்தொகை கேட்டு விண்ணப்பித்து உத்தரவு பெற்ற அனைவருக்கும் விரைவில் முதியோர் உதவித்தொகை வழங்கப்படும். நான் வாழும் வரை உங்களுக்காக உழைத்துக்கொண்டே இருப்பேன், என தெரிவித்தார்.

 இந்நிகழ்ச்சியில் தெற்கு ஒன்றிய செயலாளர் பாலகணேஷ், வடக்கு ஒன்றிய செயலாளர் பொன்ராஜ், தெற்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ஆகாஷ் ராமானுஜம், ஊராட்சி மன்ற தலைவர்கள், திமுக நிர்வாகிகள், அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!