undefined

நீரில் மூழ்கி சேதமடைந்த பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ. 20,000 இழப்பீடு - அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தகவல்!

 

வங்கக்கடலில் உருவான 'டிட்வா' புயல் மற்றும் அதனைத் தொடர்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாகத் தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள சேதங்கள், மழை நிலவரம் மற்றும் நிவாரண உதவிகள் குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் சாத்தூர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் அவர்கள் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். பயிர் மற்றும் கால்நடை இழப்புகளுக்கு வழங்கப்படும் இழப்பீடு குறித்து அவர் விரிவாகத் தகவல் அளித்தார்.

ஆந்திராவுக்குச் செல்லும் எனக் கணிக்கப்பட்ட 'டிட்வா' புயல், சென்னைக்கு அருகே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலைகொண்டதே அதீத மழைக்குக் காரணம் என்று அமைச்சர் விளக்கினார். இந்தக் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை (டிசம்பர் 3) காலை காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுவிழக்க வாய்ப்புள்ளதாகவும், இது மாமல்லபுரம் அருகே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கவிருக்கும் மாமல்லபுரம் அருகே பேரிடர் மீட்புக் குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும், சென்னையில் மட்டும் 11 தேசியப் பேரிடர் மீட்புப் படைக் குழுக்கள் (NDRF) தயார் நிலையில் உள்ளன. ஒரு குழுவிற்கு 30 பேர் வீதம் 330 தேசியப் பேரிடர் மீட்புப் படை வீரர்கள் தற்போது தயார் நிலையில் உள்ளனர்.

இந்தக் கனமழையால் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகள் மற்றும் உடமைகள் சேதமடைந்த விவரங்களை அமைச்சர் வெளியிட்டார்: 'டிட்வா' புயல் காரணமாகச் சுவர் இடிந்து 2 பேரும், மின்சாரம் தாக்கி 2 பேரும் என மொத்தம் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

மாநிலம் முழுவதும் 85,521.76 ஹெக்டேர் விளை நிலங்கள் மழையால் பாதிக்கப்பட்டுள்ளன. பயிர்கள் கணக்கெடுக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மழை முழுவதுமாக நின்ற பின்பே பயிர்கள் கணக்கெடுப்பு முழுமையாக மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் அறிவித்தபடி, தமிழ்நாடு முழுவதும் நீரில் மூழ்கிச் சேதமடைந்த விளை நிலத்துக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ. 20,000 இழப்பீடு வழங்கப்படும் என்று அமைச்சர் உறுதி செய்தார். மாநிலம் முழுவதும் இந்தக் கனமழை காரணமாக 582 கால்நடைகள் உயிரிழந்துள்ளன. உயிரிழந்த இந்தக் கால்நடைகளுக்கான நிவாரணமும் விரைவில் வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார். மாநில அரசு போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருவதாகவும், பொதுமக்களுக்குத் தேவையான உதவிகளைத் தொடர்ந்து வழங்கும் என்றும் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!