இந்தியா முழுவதும் அனைத்து வங்கி ATM-களிலும் ரூ.100, ரூ.200 நோட்டுகளை கட்டாயம் வைக்க உத்தரவு... ஆர்பிஐ அதிரடி!
இந்தியா முழுவதும் செயல்பட்டு வரும் அரசு மற்றும் தனியார் வங்கிகளில் பெரும்பாலானவை தங்களது ஏடிஎம் எந்திரங்களில் ரூபாய் 500 நோட்டுகளை மட்டும் வைக்கின்றன. இதனால் சாமானிய மக்கள் ஏடிஎம் எந்திரங்களில் பணம் எடுக்க முடிவதில்லை.
அதாவது சாமானிய மக்கள் வங்கி கணக்கில் இருக்கும் சிறிய தொகையை எடுக்க முடியாமல் தவித்து வருவதாக தொடர் புகார்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து ரிசர்வ் வங்கி அந்த புகார்களை பரிசீலனை செய்து அனைத்து வங்கிகளுக்கும் அதிரடி உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இது குறித்து வெளியிட்ட அறிக்கையில் செப்டம்பர் மாதம் 30 ம் தேதிக்குள் அனைத்து வங்கிகளும் தங்களது ஏடிஎம் எந்திரங்களில் ரூ.100 மற்றும் ரூ. 200 மதிப்புள்ள நோட்டுகளை கட்டாயமாக வைக்க வேண்டும்.அதாவது ஏடிஎம் ஆப்ரேட்டர்கள் அனைத்து ஏடிஎம்களிலும் 75% குறைந்தது ஒரு கேசட்டில் ரூ. 100 அல்லது ரூ.200 மதிப்புள்ள நோட்டுகளை கட்டாயம் விநியோகிக்கும்படி செட் செய்ய வேண்டும்.2026 மார்ச் 31ம் தேதிக்குள் அனைத்து ஏடிஎம்களிலும் 90% குறைந்தது ஒரு கேசட்டிலிருந்து ரூ.100 அல்லது ரூ.200 மதிப்புள்ள நோட்டுகள் விநியோகிக்கும்படி அமைக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.
தற்போது இந்தியாவில் செயல்பட்டு வரும் ஏடிஎம்களில் 4 வித நோட்டுகளை வைக்கும் அளவுக்கு கேசட்டுகள் உள்ளன. இருப்பினும் அனைத்திலும் ரூபாய் 500 நோட்டுகள் மட்டுமே வைக்கப்படுகின்றன. இதனை முற்றிலும் தடுக்கும் வகையில் ரிசர்வ் வங்கி இந்த முடிவை மேற்கொண்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!