ரூ.234 கோடி நெய் மோசடி - திருப்பதி லட்டு விவகாரத்தில் அடுத்தடுத்து அதிர்ச்சி!
உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு விசாரணைக் குழு (SIT) மற்றும் சிபிஐ (CBI) இணைந்து நடத்திய விசாரணையின் முடிவில், கடந்த சில ஆண்டுகளாக லட்டு தயாரிப்பில் நெய்க்குப் பதிலாகச் செயற்கை வேதிப்பொருட்கள் பயன்படுத்தப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.
விசாரணைக் குழு தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையின்படி, 2019 முதல் 2024 வரையிலான காலக்கட்டத்தில், சுமார் 68 லட்சம் கிலோ கலப்பட நெய் திருப்பதி தேவஸ்தானத்திற்கு (TTD) விநியோகிக்கப்பட்டுள்ளது. இதன் மொத்த மதிப்பு சுமார் ரூ. 234.51 கோடி
உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 'போலே பாபா ஆர்கானிக் டெய்ரி' உள்ளிட்ட நிறுவனங்கள், பால் அல்லது வெண்ணெய் இன்றி, முழுக்க முழுக்கச் செயற்கை முறையில் இந்த 'நெய்யை' தயாரித்துள்ளது அம்பலமாகியுள்ளது. நெய்யின் தரத்தைச் சோதிக்கும் ஆய்வகப் பரிசோதனைகளை ஏமாற்றுவதற்காகப் பல ரசாயனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன:
பனை எண்ணெய், பாம் கேர்னல் எண்ணெய் மற்றும் பாமலின் ஆகியவை பெருமளவில் கலக்கப்பட்டிருந்தன. லட்டுவிற்குத் தேவையான நெய் மணத்தைக் கொண்டு வர பீட்டா கேரோட்டின், அசிடிக் ஆசிட் எஸ்டர் மற்றும் லாக்டிக் அமிலம் போன்ற வேதிப்பொருட்கள் சேர்க்கப்பட்டன.
சிபிஐ தனது இறுதி அறிக்கையில், இதில் மாட்டிறைச்சி கொழுப்பு அல்லது பன்றி கொழுப்பு இருந்ததற்கான ஆதாரங்கள் இல்லை என்றும், இது முற்றிலும் செயற்கை மற்றும் தாவர எண்ணெய் கலப்பு என்றும் தெளிவுபடுத்தியுள்ளது.
இன்று பிப்ரவரி 10ம் தேதி கிடைத்துள்ள முக்கிய தகவலின்படி, இந்த ஊழலில் சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் நடந்துள்ளதா என்பதை ஆய்வு செய்ய, அமலாக்கத்துறை (ED) தற்போது PMLA சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது. சுமார் ரூ.20 கோடி வரை ஹவாலா முறையில் கைமாறியுள்ளதாகச் சந்தேகிக்கப்படுகிறது. முன்னாள் டிடிடி அதிகாரிகள் 9 பேர் மற்றும் டைரி நிபுணர்கள் 5 பேர் உட்பட மொத்தம் 36 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
முந்தைய ஆட்சிக்காலத்தில் டெண்டர் விதிகள் திட்டமிட்டுத் தளர்த்தப்பட்டதே இந்த ஊழலுக்குக் காரணமாகக் கூறப்படுகிறது. தகுதியற்ற நிறுவனங்களுக்குப் பல கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதற்காகத் தேவஸ்தான அதிகாரிகள் சிலருக்குப் பணமாகவும், விலையுயர்ந்த பரிசுகளாகவும் லஞ்சம் வழங்கப்பட்டதை சிபிஐ உறுதி செய்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!