undefined

மதுரைக்கு ₹3000, கோவைக்கு ₹4000.. கிறிஸ்துமஸ், அரையாண்டு தொடர் விடுமுறையால் ஆம்னி பஸ் கட்டணங்கள் பலமடங்கு உயர்வு!

 

கிறிஸ்துமஸ் மற்றும் அரையாண்டு விடுமுறையைத் தொடர்ந்து, சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்லக் காத்திருந்த மக்களுக்கு ஆம்னி பஸ் கட்டணங்கள் மிகப் பெரிய அதிர்ச்சியைத் தந்துள்ளன. பிழைப்பு தேடி சென்னைக்கு வந்த நடுத்தர வர்க்க மக்கள், பண்டிகை நாட்களிலாவது ஊருக்குப் போய் வரலாம் என்று நினைத்தால், ஒரு டிக்கெட் விலையைக் கேட்டு தலை சுற்றிக் கீழே விழாத குறையாக இருக்கிறார்கள்.

வழக்கமான நாட்களில் சென்னை முதல் நாகர்கோவில் அல்லது கோவை வரை செல்ல 800 முதல் 1,200 ரூபாய் வரை மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படும். ஆனால், நாளை (செவ்வாய்க்கிழமை) இரவு ஊருக்குப் புறப்பட விரும்புபவர்கள் படுக்கை வசதி கொண்ட (Sleeper) பேருந்துகளில் செல்ல வேண்டும் என்றால், கோவைக்கு சுமார் 4,000 ரூபாயும், நெல்லை மற்றும் நாகர்கோவிலுக்கு 4,500 ரூபாய் வரையிலும் செலவு செய்ய வேண்டியுள்ளது. தூத்துக்குடிக்கு 4,300 ரூபாய், மதுரைக்கு 3,300 ரூபாய் எனத் தங்கம் விலையைப் போலப் பேருந்து கட்டணங்கள் எகிறிக் கிடக்கின்றன.

சேலம் செல்வதற்கு கூட 3,000 முதல் 4,000 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுவதைக் கண்டு பயணிகள் கொந்தளிப்பில் உள்ளனர். "ஒரு குடும்பத்தில் நான்கு பேர் ஊருக்குச் செல்ல வேண்டுமென்றால், வெறும் பயணத்திற்கே 20,000 ரூபாய் ஆகிறது; இது அநியாயம்" என்று மக்கள் புலம்புகிறார்கள். போக்குவரத்துத் துறை இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றும், விழாக்காலங்களில் ஆம்னி பேருந்துகளின் கட்டணக் கொள்ளையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.

இதற்கிடையில், இந்தத் தனியார் பேருந்து கட்டணக் கொள்ளையிலிருந்து தப்பிக்கப் பயணிகளுக்கு ஒரு நற்செய்தி காத்திருக்கிறது. ஆம்னி பஸ் கட்டணத்தைப் பார்த்து மிரளாமல், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்குச் சென்றால் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்படும் சிறப்புப் பேருந்துகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம். பயணிகளின் கூட்டத்திற்கு ஏற்ப கூடுதல் பேருந்துகளை இயக்க அரசு தயாராக உள்ளதால், குறைவான செலவில் பாதுகாப்பாக ஊருக்குச் சென்று பணத்தை மிச்சப்படுத்தலாம் என்று அதிகாரிகள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!