undefined

ரூ.35 லட்சம் மோசடி... சபரிமலையில் 'நெய்' முறைகேடு... விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு!

 

சபரிமலை ஐயப்பனைத் தரிசிக்க வரும் லட்சக்கணக்கான பக்தர்கள் வாங்கும் நெய்யில், சில அதிகாரிகளின் துணையோடு பெரிய அளவில் ஊழல் நடைபெற்றுள்ளதாகக் கேரள உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

சபரிமலை தேவசம் போர்டு மூலம் விற்பனை செய்யப்படும் நெய் விற்பனையில் கணக்கு வழக்குகளில் குளறுபடி இருப்பதாகப் புகார் எழுந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் வி.ராஜா விஜயராகவன் மற்றும் கே.வி.ஜெயக்குமார் அமர்வு, இந்த முறைகேட்டின் தீவிரத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. கடந்த இரண்டு மாத காலத்திலேயே சுமார் ₹35 லட்சத்திற்கும் மேல் முறைகேடு நடந்துள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

"உயர் மட்ட அதிகாரிகளுக்குத் தெரியாமல் இவ்வளவு பெரிய முறைகேடு நடக்க வாய்ப்பே இல்லை. இரண்டு மாதத்தில் இவ்வளவு என்றால், கடந்த பல ஆண்டுகளாக மற்ற வருவாய் வழிகளில் எவ்வளவு முறைகேடு நடந்திருக்கும் என்பதை நினைத்துப் பார்க்கவே கடினமாக உள்ளது" என நீதிபதிகள் ஆவேசமாகத் தெரிவித்தனர்.

இந்த ஊழலை விசாரிக்க லஞ்ச ஒழிப்புத்துறையின் நேர்மையான அதிகாரிகளைக் கொண்ட ஒரு சிறப்புக் குழுவை உடனடியாக அமைக்க வேண்டும். இந்தக் குழு ஒரு மாத காலத்திற்குள் தனது விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். இந்த விசாரணைக்குழு நீதிமன்றத்திற்கு மட்டுமே பதில் சொல்லக் கடமைப்பட்டது. இறுதி அறிக்கையைத் தாக்கல் செய்யும் முன் நீதிமன்றத்தின் அனுமதியைப் பெற வேண்டும்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!