undefined

திருப்பதியில் ஒரே நாளில் ரூ.3.84 கோடி காணிக்கை... தரிசனத்திற்கு 16 மணி நேரம் காத்திருப்பு!

 

திருப்பதி: ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோவிலுக்கு, விடுமுறை தினமான நேற்று முன்தினம் மட்டும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்துள்ளனர். பக்தர்கள் வருகை அதிகரிப்பால் திருமலை முழுவதும் கூட்டம் நிரம்பி வழிகிறது.

நேற்று ஒரே நாளில் சுமார் 76,289 பக்தர்கள் ஏழுமலையானைச் தரிசனம் செய்துள்ளனர். சுமார் 27,586 பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனாகத் தலைமுடி காணிக்கை செலுத்தினர். பக்தர்களின் காணிக்கை மூலம் ஒரே நாளில் 3 கோடியே 84 லட்சம் ரூபாய் உண்டியல் வருமானமாகக் கிடைத்துள்ளது.

வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ் பகுதிகளில் உள்ள 11 கம்பார்ட்மெண்டுகளிலும் பக்தர்கள் நிரம்பி வழிகின்றனர். நேரம் குறிப்பிடப்பட்ட டோக்கன்கள் இல்லாத பக்தர்கள், தர்ம தரிசனத்திற்காக சுமார் 16 மணிநேரம் வரை நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழல் நிலவுகிறது. ரூ.300 விரைவு தரிசன டிக்கெட் வைத்துள்ள பக்தர்கள் 3 முதல் 4 மணிநேரத்திற்குள் தரிசனம் செய்து வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!