undefined

ரூ.6,266 கோடி மதிப்பிலான ரூ 2000 ரூபாய் நோட்டுகள் இன்னும் புழக்கத்தில் உள்ளன... ரிசர்வ் வங்கி தகவல்! 

 

நாடு இந்தியா முழுவதும்  2023ம் ஆண்டில் மே 19ம் தேதி உயர் மதிப்புள்ள ரூ 2000 நோட்டுகளை திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது. இதனையடுத்து பொதுமக்கள் அந்த நோட்டுகளை வங்கிகளில் திரும்ப செலுத்தினர். அந்த நேரத்தில், புழக்கத்தில் இருந்த 2,000 ரூபாய் நோட்டுகளின் மொத்த மதிப்பு ரூ.3.56 லட்சம் கோடியாக கணக்கிடப்பட்டிருந்தது. 

ஆனால்  இந்தாண்டு ஏப்ரல் 30ம் தேதி, 98.24 சதவீதம் நோட்டுகள் மட்டுமே திரும்ப பெறப்பட்டதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.அதன்படி  ரூ.6,266 கோடி மதிப்பிலான ரூ 2000 நோட்டுகள் திரும்ப வரவில்லை. மே 19, 2023 அன்று புழக்கத்தில் இருந்த ரூ.2000 ரூபாய் நோட்டுகளில் 98.24 சதவீதம் திரும்பப் பெறப்பட்டுள்ளன என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இந்த ரூபாய் நோட்டுகளை வங்கிக் கிளைகளில் டெபாசிட் செய்ய அல்லது மாற்றி கொள்ளும் வசதி அனைத்து வங்கி கிளைகளிலும் 2023 அக்டோபர் 7 வரை நடைமுறையில் இருந்தது. அதன் பின்னர் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் அவற்றை மாற்றி கொள்ளவோ அல்லது டெபாசிட்டோ செய்யலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது