undefined

ரூ. 71,000 சம்பளத்துல அரசு வேலை.. மொத்தம் 761 பணியிடங்கள்! உடனே அப்ளை பண்ணுங்க!

 

தமிழக ஊரக வளர்ச்சி துறையில் காலியாக உள்ள சாலை ஆய்வாளர் பதவிக்கான நேரடி நியமனம் செய்யப்பட உள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதியாக பிப்ரவரி 11ம் தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இன்னும் 2 நாட்களுக்குள் அப்ளை பண்ணிடுங்க. 

பணி : சாலை ஆய்வாளர்

மொத்த பணியிடங்கள் : 761

கல்வித் தகுதி:

அரசு அங்கீகாரம் பெற்ற ஏதோனும் ஒரு கல்வி நிறுவனத்தில் ஐ.டி.ஐ., சிவில் இன்ஜினியரிங் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். சிவில் டிராஃப்ட்மேன்ஷிப் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். 

வயது வரம்பு:

அதிகபட்ச வயது வரம்பு 37. பட்டியலின, பழங்குடியின பிரிவினருக்கு உச்ச வயது வரம்பு இல்லை. 

ஊதிய விவரம்:
மாதம் ரூ.19, 500 முதல் ரூ. 71,900 வரை 

விண்ணப்பக் கட்டணம்:
ஒரு முறை பதிவு/ நிரந்தரப்பதிவு:

விண்ணப்பதாரர்கள் நிரந்தரப் பதிவுக்கட்டணமாக ரூ.150யை செலுத்தி தங்களது அடிப்படை விவரங்களை நிரந்தர பதிவில்  பதிவு செய்து கொள்ள வேண்டும். 

இப்படி நிரந்தரமாக பதிவு செய்து கொண்டால், பதிவு செய்த நாளில் இருந்து 5 வருட காலத்திற்கு அந்த பதிவு செல்லத்தக்கதாகும். 

நிரந்தர பதிவு செய்திருந்தாலும், அதன் பின்னர் தேர்வு எழுத விரும்பும் ஒவ்வொரு தேர்விற்கும் விண்ணப்பதாரர்  தனித்தனியே இணைய வழியில் விண்ணப்பிக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை:

கணினி வழித் தேர்வு, நேர்முகத் தேர்வு, வாய்மொழித் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

எப்படி விண்ணப்பிப்பது?

ஆன்லைனில் www.tnpscexams.in , www.tnpsc.gov.in  ஆகிய இணையதள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விவரிவான கூடுதல் விவரங்களுக்கு https://www.tnpsc.gov.in/Document/tamil/02_2023_RI_TAM.pdf என்ற இணையதள முகவரியை க்ளிக் செய்து தெரிந்து கொள்ளவும். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்