undefined

ரூ. 3.25 லட்சம் கோடியில் ரஃபேல் ஒப்பந்தம்... இந்திய விமானப்படையின் 'மெகா' திட்டம்!

 

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் வரும் பிப்ரவரி மூன்றாவது வாரத்தில் இந்தியா வரவுள்ள நிலையில், அதற்கு முன்னதாக இந்த ஒப்பந்தத்திற்குப் பாதுகாப்புத் துறை அமைச்சகம் ஒப்புதல் அளிக்கத் தயாராகி வருகிறது. மொத்தம் 114 ரஃபேல் போர் விமானங்கள் வாங்க உள்ள நிலையில், இதில் 88 விமானங்கள் ஒற்றை இருக்கை கொண்டதாகவும், 26 விமானங்கள் பயிற்சிக்கு ஏற்ற இரட்டை இருக்கை கொண்டதாகவும் இருக்கும்.

'மேக் இன் இந்தியா' திட்டத்தின் கீழ், 18 விமானங்கள் பிரான்ஸிலிருந்து நேரடியாக வாங்கப்படும். மீதமுள்ள 96 விமானங்கள் இந்தியாவில் உள்ள தனியார் நிறுவனங்களுடன் இணைந்து உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும். இந்திய விமானப்படையில் அனுமதிக்கப்பட்ட 42 படைப்பிரிவுகளுக்குப் பதிலாக தற்போது 29 பிரிவுகள் மட்டுமே உள்ளன. இந்த இடைவெளியை நிரப்ப ரஃபேல் விமானங்கள் மிகவும் அவசியமாகின்றன.

தற்போது வாங்கப்பட உள்ளவை F4.1 மற்றும் F4.2 ஆகிய மிக நவீன வெர்ஷன்கள் ஆகும். இவை எதிரி நாட்டு ஏவுகணைகளைத் திசைதிருப்பும் மற்றும் ரோபோ ட்ரோன்களை இயக்கும் திறன் கொண்டவை. பாதுகாப்புத் துறைச் செயலாளர் தலைமையிலான பாதுகாப்பு கொள்முதல் வாரியம் (DPB) கடந்த மாதம் இந்தத் திட்டத்திற்கு ஆரம்பகட்ட ஒப்புதலை அளித்தது.

வரும் பிப்ரவரி 12ம் தேதியன்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான பாதுகாப்புத் துறை கொள்முதல் கவுன்சில் (DAC) இதற்கான 'தேவைக்கான ஏற்பு' அனுமதியை வழங்க உள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் சுமார் 80% பணிகள் இந்தியாவில் நடைபெறுவதால், இது உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை உற்பத்தியை) ஊக்கப்படுத்தும். சுமார் 60% பாகங்கள் இந்தியாவிலேயே தயாரிக்கப்படத் திட்டமிடப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!