undefined

விதவைகளுக்கு மாதந்தோறும் ரூ.3000.. பெண்களுக்கு இலவச பேருந்து பயணம்.. அனைவருக்கும் ஆயுள் காப்பீடு... புதுச்சேரி அரசு அதிரடி!

 

புதுவையில் அனைத்து ரேஷன் அட்டைத்தாரர்களுக்கும் ஆயுள் காப்பீடு, விதவைப் பெண்களுக்கு வழங்கப்பட்டு வந்த மாதம் ரூ.2000 திட்டத்தில் இனி மாதந்தோறும் ரூ.3000, அரசு பேருந்துகளில் ஆதிதிராவிட பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என்று புதுச்சேரி பட்ஜெட் மீது சட்டமன்ற உறுப்பினர்கள் நடத்திய விவாதத்திற்கு முதலமைச்சர் ரங்கசாமி நேற்று அதிரடியாக பல அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்புகளுக்கு மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது. 

இந்த திட்டத்தை அனைத்து மகளிருக்கும் நீட்டிக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் உறுப்பினர்கள் கேட்டு கொண்டுள்ளனர். அதனால், அனைத்து பெண்களும் அரசு பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என்று புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி நேற்று அறிவித்துள்ளார்.

மேலும், விதவை தாய்மார்களுக்கு மாதந்தோரும் வழங்கப்படும் ₹2,000 உதவித்தொகை ₹3,000 ஆக உயர்த்தப்படுவதாகவும் புதுச்சேரி முதல்வர் அறிவித்துள்ளார். மேலும், அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஆயுள் காப்பீட்டு திட்டம் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என்று அறிவித்துள்ளார். 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!