ரூ.100, 500 நோட்டுகளில் புதிய மாற்றங்கள்... ரிசர்வ் வங்கி அதிரடி!
இந்திய ரிசர்வ் வங்கி ரூ.100 மற்றும் ரூ.500 நோட்டுகளின் தரம் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்த புதிய அம்சங்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. காகிதத்தின் தரம், பயன்படுத்தப்படும் மை மற்றும் வார்னிஷ் ஆகியவை வலுப்படுத்தப்பட்டு நோட்டுகளின் ஆயுள் நீட்டிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.500 நோட்டுகளில் மேம்பட்ட வாட்டர்மார்க் மற்றும் நுண்ணிய எழுத்துகள் சேர்க்கப்பட உள்ளன. இதன் மூலம் கள்ளநோட்டுகளை தடுக்கும் முயற்சி வலுப்பெறும் என கூறப்படுகிறது.
புதிய நோட்டுகளில் ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா கையொப்பம் இடம்பெறும். ஆனால் சக்திகாந்த தாஸ் கையொப்பமிட்ட பழைய நோட்டுகளும் தொடர்ந்து செல்லுபடியாகும் என இந்திய ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!