ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள்… உக்ரைன் மீது ரஷியாவின் தீவிர தாக்குதல்!
ரஷியா–உக்ரைன் போர் 4-ம் ஆண்டை நெருங்கி வருகிறது. நேட்டோவில் சேரும் முடிவை கைவிட வலியுறுத்தி ரஷியா ராணுவ தாக்குதலை தொடர்ந்து வருகிறது. இரு தரப்பிலும் பெண்கள், குழந்தைகள், வீரர்கள் என ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி செய்தியாளர்களிடம் பேசினார். கடந்த ஒரே வாரத்தில் ரஷியா 1,100 டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியதாக அவர் குற்றம்சாட்டினார். 890-க்கும் மேற்பட்ட குண்டுகள், 50-க்கும் அதிகமான ஏவுகணைகள் வீசப்பட்டதாக கூறினார்.
ராணுவ நோக்கம் இல்லாத குடியிருப்புகள் மற்றும் எரிசக்தி கட்டமைப்புகள் குறிவைக்கப்பட்டதாக அவர் வேதனை தெரிவித்தார். மின் இணைப்பு, வெப்பம், குடிநீர் வழங்க ஊழியர்கள் இரவு பகலாக உழைத்து வருவதாக கூறினார். சமீபத்திய தாக்குதலில் 2 பேர் உயிரிழந்து, 15 பேர் காயமடைந்தனர். அதற்கு முன் கீவில் நடந்த தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!