undefined

 “ஐரோப்பா போரில் இறங்கினால்… நாங்களும் தயார்!”... புதின் கடும் எச்சரிக்கை

 
 


 

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் முன்வைத்த 28 அம்ச அமைதித் திட்டத்தை ஐரோப்பிய நாடுகள் ஏற்காத சூழலில், ரஷ்ய அதிபர் புதின் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். “ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவுடன் போரைத் தொடர முயன்றால், நாங்களும் போருக்கு தயாராக உள்ளோம். சமாதான பேச்சுவார்த்தையை நடத்த யாரும் இல்லாதபடி, ஐரோப்பா முழுமையான தோல்வியைச் சந்திக்கும்” என்று புதின் தெரிவித்தார். ட்ரம்பின் சிறப்பு தூதர்கள் க்ரெம்லினில் நடத்திய 5 மணி நேர பேச்சுவார்த்தைக்குப் பிறகுதான் இந்த எச்சரிக்கை வெளியாகியுள்ளது.

உக்ரைன் தனது ரஷ்ய ஆக்கிரமிப்பு பகுதிகளை அங்கீகரிக்க வேண்டும், ஆயுதக் குவிப்பை குறைக்க வேண்டும் போன்ற கடின நிபந்தனைகள் அடங்கியுள்ள ட்ரம்பின் அமைதி திட்டம் “உக்ரைனுக்கு சாதகமில்லை” என்று ஐரோப்பிய நாடுகள் மறுத்துள்ளன. புதின், “ஐரோப்பா அமைதியை விரும்பவில்லை; போரை நீடிக்கவே விரும்புகிறது” என்று குற்றம் சாட்டியுள்ளார். இதேசமயம், ஐரோப்பிய யூனியன் தலைவர்கள் ரஷ்யாவின் போர் நடவடிக்கைகளையே காரணமாக சுட்டிக்காட்டி, “உக்ரைனின் உரிமைகளைப் பாதுகாக்கும் அமைதியே ஏற்றது” என பதிலளித்துள்ளனர்.

போர் தொடங்கி நான்கு ஆண்டுகள் கடந்த நிலையில், ரஷ்யா உக்ரைனின் 19% பகுதியை கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. ஐரோப்பா–அமெரிக்க உதவி தொடர்ந்து கிடைத்தாலும், போர் தீவிரம் குறைவதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை. ஜெனீவா பேச்சுவார்த்தையிலும் எந்தத் தீர்வும் எட்டப்படாத நிலையில், ட்ரம்பின் திட்டத்தை ரஷ்யா “முழுமையாக ஏற்க முடியாது” என்று மீண்டும் தெரிவித்துள்ளது. ஐரோப்பாவின் பாதுகாப்பைப் பொருத்தவரை புதினின் இந்த எச்சரிக்கை பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!