undefined

  ரஷிய ராணுவ உளவுத் துணைத் தளபதி மீது துப்பாக்கிச் சூடு!

 
 

ரஷிய ராணுவ உளவுத் துறையின் துணைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விளாதிமீர் அலெக்ஸீவ் (64) வெள்ளிக்கிழமையன்று மாஸ்கோவில் அடையாளம் தெரியாத நபர்களால் துப்பாக்கிச் சூட்டுக்கு உள்ளானார். வடமேற்கு மாஸ்கோவில் உள்ள அவரது குடியிருப்பில் நடந்த இந்த தாக்குதலில் அலெக்ஸீவ் பலத்த காயமடைந்தார். அவர் தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

சிரியா போரில் சிறப்பாகச் செயல்பட்டதற்காக ‘ஹீரோ ஆஃப் ரஷியா’ பதக்கத்தை பெற்ற அலெக்ஸீவ், கடந்த 2023-இல் வாக்னா் தனியார் ஆயுத படை கிளர்ச்சியில் அதன் தலைவா் பிரிகோஜினுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டவர். இதுகுறித்து ரஷிய அதிபர் விளாதிமீர் புதினுக்கு அதிகாரபூர்வமாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிரெம்ளின், ராணுவ உயர் அதிகாரிகளின் பாதுகாப்பை மேலும் பலப்படுத்தும் வகையில் அறிவுறுத்தியுள்ளது.

கடந்த ஆண்டில் ஏப்ரல் மற்றும் டிசம்பர் மாதங்களில் அதே தரப்பிலிருந்த அதிகாரிகள் கார் குண்டுவெடிப்புகளில் கொல்லப்பட்டிருந்தனர். இதற்கிடையே, இந்த நிகழ்விலும் உக்ரைனின் சதி இருக்க வாய்ப்பு என்று ரஷியா சந்தேகித்து வருகின்றது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!