உக்ரைன் மீது ரஷ்யா ஏவுகணை டிரோன் தாக்குதல்: 8 பேர் காயம்!
உக்ரைன் - ரஷ்யா இடையே போர் நீடித்து வரும் நிலையில், ரஷியப் படைகள் உக்ரைன் தலைநகர் கீவ் உட்படப் பல பகுதிகளில் நடத்திய ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதலில் 8 பேர் காயமடைந்தனர். இன்று போர் 1,383-வது நாளாகத் தொடர்ந்து நடந்து வருகிறது.
ரஷ்யா 653 டிரோன்கள் மற்றும் 51 ஏவுகணைகள் மூலம் உக்ரைன் மீது தாக்குதல் நடத்தியது. இதில் பெரும்பாலான ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் உக்ரைனின் வான் பாதுகாப்பு அமைப்பால் நடுவானில் சுட்டு வீழ்த்தப்பட்டன. ஆனாலும், சில டிரோன்கள் மற்றும் ஏவுகணைகள் உக்ரைனில் உள்ள குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகங்கள் மீது தாக்குதல் நடத்தின. இந்தத் தாக்குதல்களில் 8 பேர் காயமடைந்தனர்.
இந்தப் போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வரும் நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் போரை முடிவுக்குக் கொண்டு வர முயற்சித்து வருகிறார். அவர் போர் நிறுத்தம் தொடர்பாக 28 நிபந்தனைகள் கொண்ட உடன்படிக்கையை முன்மொழிந்துள்ளார். இந்த நிபந்தனைகளில் சிலவற்றை ஏற்க உக்ரைன் மறுத்து வருவதால், போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!